Category: Uncategorized

  • அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி!

    இலங்கையில் நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (03.12.2025) நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

    எதிர்க்கட்சியின் அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற யோசணையை முன்மொழிந்திருந்தார்.

    நாட்டில் கடந்த 26 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஐநூறை நெருங்கியுள்ளது.

    இவ்வாறான பின்னணியில், கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடியது. 

    இதன்போது, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெறவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பில் அன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்துரையாட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. 

    எனினும், அன்றைய தினம் மதியம் 12.30 வரை மாத்திரமே குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாட அனுமதிக்க முடியும் என அரசாங்க தரப்பிலிருந்து உறுதியாக தெரிவிக்கப்பட்ட காரணத்தினால் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தன.

    அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் இன்றைய தினத்துக்கு (03.12.2025) ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  • உயர்தர பரீட்சை விடைத்தாள்களின் நிலை…! பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

    உயர்தர பரீட்சை விடைத்தாள்களின் நிலை...! பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு | Department Of Examination Abt Gce Al Examination

    இந்த ஆண்டு க. பொ. த. உயர்தர பரீட்சை (GCE A/L) எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களுக்கு அனர்த்தத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.

    உயர்தர பரீட்சையின் அனைத்து விடைத்தாள்களும் உரிய பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. 

    மேலும் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும்பரீட்சை நிறைவடைந்த பின்னர் அனைத்து விடைத்தாள்களும் பாதுகாப்பாக உரிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

    இது பல ஆண்டுகளாக சரியாக நடந்துவரும் ஒரு நடைமுறை. காலநிலை நிலைமைகள் குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி மிகுந்த அவதானத்துடன் செயல்பட்டு வருகிறோம்  என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

    இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான மீதமுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ (Nalaka Kaluwewe) தெரிவித்துள்ளார்.

    அத்துடன் மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலைமையை மதிப்பாய்வு செய்த பின்னர், போக்குவரத்துத் தடைகள், தகவல் தொடர்பு சிக்கல்கள் மற்றும் மின் தடைகளால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என நாலக கலுவெவ குறிப்பிட்டுள்ளார்.

  • அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

    ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (03) மாலை 05.00 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

    அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார இந்தக் கூட்டத்தை அறிவித்தார்.

    அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது.

  • மன்னார் மாவட்டத்தில் அதிக வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு வடக்கு ஆளுநர் திடீர் விஜயம்

    சமீபத்தில் ஏற்பட்ட புயலின் தாக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதநிலை களை நேரடியாக மதிப்பீடு செய்வதற்காக வடக்கு மாகாண   ஆளுநர் நா. வேதநாயகன் நேற்று செவ்வாய்க்கிழமை (02) மாலை மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். 

    அதன் போது ஆளுநர்   நானாட்டான் பிரதேச செயலத்துக்குட்பட்ட அருகம் குண்று, மடுக்கரை உள்ளிட்ட அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களின் நிலை குறித்து நேரில் அறிந்துகொண்டார். 

    வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், குடிநீர் மற்றும் மின்சாரம் தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் அவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உரையாடிய ஆளுநர்   தேவையான நிவாரண உபகரணங்கள் மற்றும் உடனடி உதவிகளை வேகமாக வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மன்னார் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள உதவிகளை வழங்க அரசாங்கம் முழு ஆதரவு வழங்கும் என ஆளுநர் அவர்கள் உறுதியளித்தார்.

    இந்த விஜயத்தில் மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் என கலந்து கொண்டனர்.

  • Hello world!

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!