ஆன்மிகம்

உங்க கையில இந்த ரோகை இருக்கா? காதல் கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லையாம்

நமது கையில் இருக்கும் ஒவ்வொரு கோட்டிற்கும் ஒரு அர்த்தம் உள்ளது.

ஆயுள்ரேகை, இதய ரேகை, விதி ரேகை, தலைமை ரேகை மற்றும் கல்யாண ரேகை. இவற்றை கொண்டுதான் ஒருவரின் விதி நிர்ணயிக்கப்படுகிறது.

அந்தவகையில் இதய கோடு சுண்டுவிரலின் கீழ்ப்புறத்தில் தொடங்கி ஆள்காட்டி விரல் நோக்கி செல்லும் கொடு இதய கோடு என்று அழைக்கப்படுகிறது.

இதற்கு காதல் கோடு என்ற பெயரும் உள்ளது, இது ஒருவரின் உணர்ச்சிகள் மற்றும் உடல்ரீதியான தொடர்புகளை பற்றி கூறுவதாக இருக்கிறது.

இது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கும். ரேகைகளை அடிப்படையாக கொண்டு உங்களது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

நேர்கோடு

உங்கள் இரண்டு நேர்கோட்டையும் ஒன்றாக வைத்து பார்த்தால் அவை இரண்டும் ஒரே வடிவில் இருந்து நேர்கோடாக இருந்தால் நீங்கள் அமைதி, ஒழுக்கம் மற்றும் கருணை நிறைந்தவராக இருப்பீர்கள்.

அவர்கள் சீரான மனநிலையை கொண்டவராக இருப்பீர்கள், எதிர்மறை சிந்தனைகள் கொண்டவர்களுடன் பழகுவது என்பது உங்களுக்கு பிடிக்காததாகும்.

தன்னுடைய அமைதியான வாழ்க்கையை கெடுக்கும் எவரையும் இவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இந்த குணம் கொண்டவர்கள் எப்பொழுதும் வீட்டில் பார்க்கும் வரனைத்தான் திருமணம் செய்து கொள்வார்கள்.

வித்தியாசமான இதய கோடு

ஒருவேளை இதய கோடுகள் இரண்டும் வித்தியாசமாக இருந்தால் அதாவது ஒன்று மற்றொன்றை விட பெரியதாகவோ அல்லது வேறு திசையில் சென்றாலோ அவர்கள் வயதிற்கும், செயல்களுக்கும் தொடர்பே இருக்காது.

சிறுவயதிலேயே மிகவும் அனுபவசாலிகள் போல நடந்து கொள்வார்கள். இவர்கள் மற்றவர்கள் தன்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இவர்கள் அவர்களை விட முதிர்ச்சியானவர்களுடன் திருமணம் செய்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

பிறை நிலா

ஒருவேளை இதய கொடுகள் இரண்டும் அரைவட்டம் அல்லது பிறை நிலா வடிவில் இருந்தால் அவர்கள் மிகவும் வலிமையான எண்ணங்கள் மற்றும் உறுதியான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சூழ்நிலைக்கு ஏற்ப எந்தவொரு துணிச்சலான முடிவையும் இவர்கள் எதிர்கொள்ள தயங்க மாட்டார்கள். காதலிலும் இவர்கள் மிகவும் ஆழமாக இருப்பார்கள், ஆனால் அதனை கெஞ்சி பெறமாட்டார்கள்.

இந்த ரேகை உள்ளவர்களுக்கு வசீகரமும், கவர்ச்சியும் இயற்கையாகவே இருக்கும். இவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களை காதலித்து திருமணம் செய்துகொள்ள அதிக வாய்ப்புள்ளது.

கல்யாண ரேகை

உங்கள் கல்யாண ரேகையில் இரண்டு அடர்த்தியான ரேகைகள் இருந்தால் அதில் நீளமாக இருக்கும் கோடு உங்கள் திருமண வாழ்க்கையையும், சின்னதாக இருக்கும் கோடு முறியப்போகும் உறவையும் குறிக்கும்.