ஆன்மிகம்

இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு இரண்டு கல்யாணம் நடக்குமாம்! இதில் உங்களது ராசியும் இருக்கா?

இன்றைய கால கட்டத்தில் இராண்டாவது திருமணம் என்பது சாதராணமாகிவிட்டது.

மறுமணம் செய்பவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து கொண்டே செல்வதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது.

அந்தவகையில் ஜோதிடப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவோரின் அவர்களின் பிறந்த ராசி கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.

எந்த எந்த ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று பார்ப்போம்.

மேஷம்

ஜோதிட சாஸ்திரத்தின் படி நெருப்பின் அடையாளமான மேஷ ராசி காதல் விஷயங்களில் மிகவும் ஆர்வமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

இவர்களின் முதல் திருமணம் ஏதாவது காரணங்களுக்காக தோல்வியில் முடிந்தால் இவர்கள் இரண்டாம் திருமணம் செய்ய ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.

வாழ்கையிலும் காதலிலும் தனக்கு என்ன வேண்டுமோ அதனை பெறுவதில் இவர்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்.

ரிஷபம்

இவர்கள் காதலில் மிகவும் வலிமையானவர்கள். பிடிவாதமும், நேர்மையும் இவர்களின் அடிப்படை குணங்களாகும்.

இவர்கள் பொதுவாகவே வீடு, குடும்பம், திருமணம் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இவர்கள் இரண்டாவது திருமண முயற்சிக்கு ஒருபோதும் தயங்கமாட்டார்கள், ஏனெனில் பின்வாங்குவது என்பது இவர்களுக்கு இல்லாத ஒன்றாகும்.

விருச்சிகம்

வசீகரமும், ஆர்வமும் இவர்கள் கூடவே பிறந்த குணங்களாகும். ஜோதிடத்தின் படி காதல் மற்றும் திருமணத்தில் இவர்கள் எப்பொழுதும் ஆர்வமாக இருப்பார்கள்.

பொருத்தமில்லாத துணையுடன் வாழ்க்கை அமைந்தால் இவர்கள் அதனை உதற யோசிக்க மாட்டார்கள்.

அதனை விட சிறந்த தனக்கு பொருத்தமான துணையை நோக்கி இவர்கள் நகர்வார்கள். தங்கள் துணையை காதலிப்பதில் இவர்களை மிஞ்ச முடியாது ஆனால் அவர்களும் இவர்களுக்கு காதலில் ஈடுகொடுக்க வேண்டும்.

துலாம்

அதிக பொறுமையும், அதிக காதலும் உள்ள ராசிக்காரர்கள் இவர்கள். ஜோதிடத்தின் படி துலாம் ராசிக்காரர்கள் பெரும்பாலும் தங்கள் துணையை அதீதமாக நேசிப்பார்கள், ஆனால் அவர்களின் நேசத்திற்கு உரிய மரியாதை கிடைக்காத பொது அவர்கள் மற்றொரு சிறப்பான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தயங்க மாட்டார்கள்.

ஆனால் அதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள். ஏனெனில் இவர்களின் முதல் காதல் இவர்களை அதிக தொந்தரவு செய்யும். இவர்களை வாழ்க்கையில் இழப்பவர்களே துரதிர்ஷ்டசாலிகள்.

கும்பம்

அனைத்து ராசியினரும் இரண்டாவது திருமணத்திற்கு ஆசைப்படுபவர்கள் கிடையாது.

கும்ப ராசிக்காரர்களுக்கு பொதுவாக திருமணம் செய்வதில் ஆர்வம் இருக்காது, அப்படி அவர்கள் ஒப்புக்கொண்டால் அதற்கு பின்னால் வலிமையான காரணம் இருக்கும்.

இந்த சூழ்நிலையில் அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் சூழல் ஏற்பட்டால் அதற்கு அவர்கள் நீண்ட கால எடுத்து கொள்வார்கள்.

தங்கள் துணை மீதான பிணைப்பு அதிகமாகும் போது மட்டுமே இவர்கள் திருமணத்திற்கு தயாராவார்கள்.

மீனம்

மீன் சின்னமாக கொண்ட இந்த ராசியில் பிறந்தவர்கள் அதிக உணச்சிவசப்பட கூடியவர்களாக ஜோதிட சாஸ்திரித்தின் படி கருதப்படுகிறார்கள்.

இது நல்ல செய்தியா அல்லது கெட்ட செய்தியா என்று தெரியவில்லை ஏனெனில் மீன ராசிக்காரர்களுக்கு விவாகரத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆனால் இவர்களின் காதல் குணத்தாலும், அன்பான பழகும் முறையாலும் இவர்கள் மற்றொரு திருமணத்திற்கு தாராளமாக முயற்சிக்காலம்.