விளையாட்டு

பாகிஸ்தான் சூப்பர் லீக் மகுடம் சூடியது கராச்சி அணி

பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டியின் நடப்பு சீசனில் கராச்சி கிங்ஸ் அணி லாகூர் கோலண்டர்ஸ் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது

 

இந்த இறுதி போட்டி கராச்சி மைதானத்தில் நேற்று 8.30 மணியளவில் நடை பெற்றது . நாணய சுழட்ச்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய  லாகூர்கோலண்டர்ஸ் அணி 20 ஓவா்களில் 7விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் எடுத்தது. துடுப்பாட்டத்தில் தமின் 35ஓட்டங்களை அதிக பட்ச ஓட்டமாக பெற்றுக்கொண்டார் பந்து வீச்சில் அமீர் அதிக பட்சமாக 2 இலக்குகளை வீழ்த்தி இருந்தார்

 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கராச்சி கிங்ஸ் அணி 18.4ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு135  ஓட்டங்கள் எடுத்து வென்றதுதுடுப்பாட்டத்தில் பாபர் 63 அசாம் ஓட்டங்களை அதிக பட்ச ஓட்டமாக பெற்றுக்கொண்டார் பந்து வீச்சில் ஹாரிஸ் ரவூப் அதிக பட்சமாக 2 இலக்குகளை வீழ்த்தி இருந்தார்.

 

.கராச்சி கிங்ஸ் அணி வெற்றிக்கு வழிநடத்திய ,பாபர் அசாம் ஆட்டநாயகன் ,தொடர் ஆட்டநாயகன் விருதுகளை பெற்று கொண்டார்