விளையாட்டு

லா லிகா: பார்சிலோனா அணிக்கு எட்டாவது வெற்றி!

லா லிகா கால்பந்து தொடரின் ஹூஸ்கா அணிக்கெதிரான போட்டியில், பார்சிலோனா அணி வெற்றிபெற்றுள்ளது.

எல் எல்கரோஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், பார்சிலோனா அணியும் ஹூஸ்கா அணியும் மோதின.

பரபரப்பாக உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் பார்சிலோனா அணி சார்பில், பிரென்கீ டி ஜோங் 27ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி, 28 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. தோல்வியடைந்த ஹூஸ்கா அணி 12 புள்ளிகளுடன் இறுதி இடத்தில் உள்ளது.