விளையாட்டு

இந்தியாவுடனான டெஸ்ட்: அறிமுக வீரரின் அரைசதத்துடன் ஆட்டநேர முடிவில் ஆஸி 166/2

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

முதல் இன்னிங்ஸிற்றாக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில் ஸ்டீவ் ஸ்மித் 31 ஓட்டங்களுடனும் மார்னஸ் லபுஸ்சேகன் 67 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

சிட்னி மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை பெற்றது.

இப்போட்டியில் அவ்அப்போது மழை குறுக்கீடு செய்ததால், இன்று மொத்தமாக 55 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டது.

இதில் அணியின் சார்பாக வில் புகோவ்ஸ்கி 62 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 5 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், மொஹமட் சிராஜ் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இன்னமும் 8 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளை அவுஸ்ரேலியா அணி நாளை தொடரவுள்ளது