ஆயுர்வேத வைத்திய முறை தொடர்பில் பாடசாலை மாணவர்களை தௌிவூட்டுவதற்கு சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு,கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணைத்துக் கொள்வதற்கு பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறையை இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.