சினிமா

அஜித்தின் 61வது படத்தை இயக்கப்போவது இவரா?- தலயே உறுதிசெய்ததாக வந்த தகவல்

அஜித்தின் 60வது படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் தான் இப்பட இயக்குனரும்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு பின் படக்குழு குஜராத் செல்ல இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் அஜித் தனது 61வது பட இயக்குனரை தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

அண்மையில் இயக்குனர் வினோத்திற்கு குழந்தை பிறந்தது, அதற்கு வாழ்த்து கூற போன் செய்த அஜித் அப்போதே எனது 61வது படத்தையும் நீங்களே இயக்குங்கள் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.