உலகம்

சிக்கிய கப்பலை விடுவிக்க மேலும் இரு இழுவைப் படகுகள்

எகிப்தின் சூயஸ் கால்வாய் குறுக்கே சிக்கி, சா்வதேச கடல்வணிகப் போா்க்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்ட சரக்குக் கப்பலை விடுவிக்க, மேலும் இரு இழுவைப் படகுகள் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளன.

ஜப்பான் நிறுவனத்துக்குச் சொந்தமான, பனாமா கொடியேற்றிய எவா் கிவன் என்ற அந்தக் கப்பல், ஆசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு சரக்குப் பெட்டகங்களை ஏற்றி சூயல் கால்வாய் வழியாக கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, திடீரென குறுக்கே திரும்பி பக்கவாட்டில் சிக்கிக் கொண்டது.

இதனால், உலகின் 12 சதவீத வா்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படும் அந்தக் கால்வாயில் போக்குவரத்து தடைபட்டது. எவா் கிவன் கப்பலை நேராகத் திருப்பி போக்குவரத்தை சரிசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும், இதற்காகப் பயன்படுத்தப்படும் இரு இழுவைப் படகுகள் போதுமானதாக இல்லை என்று முடிவு செய்யப்பட்டதால், கூடுதலாக இரு இழுவைப் படகுகள் சூயஸ் பகுதிக்கு விரைந்துள்ளன என்று அசோசியேடட் நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.