உலகம்

வழமைக்கு திரும்பிய சூயஸ் கால்வாயின் கப்பல் போக்குவரத்து..!

எகிப்து – சூயஸ் கால்வாயின் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக சூயஸ் கால்வாய் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி பயணித்த  400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட   ஜப்பானிய நிறுவனமொன்றுக்கு சொந்தமான Ever Given கொள்கலன் கப்பல்   சுயஸ் கால்வாயில் கடந்த 22 ஆம் திகதி சிக்குண்டது.

தன் காரணமாக, 300 இற்கும் மேற்பட்ட கப்பல்கள், நிர்க்கதிக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  சுமார் 6 நாட்களின் பின்னர் குறித்த கப்பல் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில்,   சூயஸ் கால்வாயின் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிகின்றன.