உலகம்

மிருகங்களுக்கான கொரோனா தடுப்பூசி!

உலகிலேயே முதல்முறையாக கொரோனா தொற்றிலிருந்து மிருகங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான தடுப்பூசியை ரஷ்யா பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வேளாண் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு புதன்கிழமை தெரிவித்ததாவது:

மிருகங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதற்கான தடுப்பூசி முதல்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தத் தடுப்பூசியை விலங்குகளுக்குச் செலுத்தினால், 6 மாதங்களுக்கு கரோனாவிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். இதுதொடா்பான ஆய்வுகள் தொடா்ந்து மேற்ககொள்ளப்பட்டு வருகின்றன.

காா்னிவாக்-கோவ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தத் தடுப்பூசி, கடந்த அக்டோபா் மாதத்திலிருந்து நாய்கள், பூனைகள், நரி இனங்கள் மற்றும் பிற விலங்களுக்கு சோதனை முறையில் செலுத்தி சோதிக்கப்பட்டது.

இந்தத் தடுப்பூசி, அடுத்த மாதத்திலிருந்து பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மனிதா்களிடையே பரவி வரும் கரோனா தீநுண்மி, விலங்குகளின் உடல்களில் புகுந்து உருமாற்றம் பெற்று வீரியமடைவதைத் தடுக்க, காா்னிவாக்-கோவ் போன்ற விலங்குகளுக்கான தடுப்பூசிகள் உதவும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

மனிதா்களிடையே பரவி வரும் கரோனா தீநுண்மி, விலங்குகளின் உடல்களில் புகுந்து உருமாற்றம் பெற்று வீரியமடைவதைத் தடுக்க விலங்குகளுக்கான தடுப்பூசிகள் உதவும்.