இந்தியா

இந்தியாவில் முதல் தடவையாக ஒரேநாள் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

இந்தியாவில் முதல் தடவையாக ஒரேநாளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று ஒரே நாளில் ஒரு இலட்சத்து மூவாயிரத்து 793 பேருக்குத் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது. அத்துடன் நேற்று மாத்திரம் 477 பேர் தொற்றினால் தரணித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வருகின்ற நிலையில், பரிசோதனைகளும் தடுப்பூசி வழங்கலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அந்நாட்டில் மொத்தமாக இதுவரை ஒரு கோடியே 25 இலட்சத்து 87 ஆயிரத்து 920 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், அவர்களில் ஒரு கோடியே 16 இலட்சத்து 79 ஆயிரத்து 958 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன் ஒரு இலட்சத்து மூவாயிரத்து 793 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளது.