இலங்கை பிரதான செய்திகள் யாழ்ப்பாணம்

காணிப் பிரச்சனையில் மாணவர்கள் மீது தாக்குதல் – யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை – வீடியோ

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வளாகத்தை அண்டிய பகுதியில் அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தும் நபர்கள் சிலர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் துவிச்சக்கரவண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும் அதில் துவிச்சக்கரவண்டிகளை நிறுத்தவேண்டாம் எனக்கூறியுமே மாணவர்கள் தாக்கப்பட்தாக தெரிவிக்கப்படுகிறது.

 

கடந்த சில மாதங்களாக காணிப் பிரச்சினை நடைபெற்று வருகிறது

இந்நிலையில், இன்று காலை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்கு சென்ற அமெரிக்கன் மிசன் என்று அடையாளப்படுத்தும் நபர்கள் மாணவர்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கு செல்ல முடியாதவாறு தடிகள், சீற்றுகளை போட்டு பாதையை மறித்துள்ளனர்.

எனினும், அங்கு ஆசிரியர்கள் வருகை தந்த பின்னர் மாணவர்கள் வாகனங்களை உள்ளே நிறுத்தியபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஐந்துக்கும் மாணவர்கள் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழை பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.