இந்தியா

கொரோனா வைரஸ் : இனிவரும் காலப்பகுதியில் 5700 வரை உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்ற நிலையில், அடுத்த மாதத்திற்குள் ஒரேநாளில் 5 ஆயிரத்து 700 பேர் வரை உயிரிழக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி  இரண்டாவது அலையின்  காரணமாக மே மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு நாளைக்கு 5 இலட்சம் வரை புதிய தொற்றாளர்கள் இனங்காணக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வழக்குகளின் படி இறப்பு விகிதம் 1.14 வீதமாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில். இனிவரும் காலப்பகுதியில் 5 இலட்சம் புதிய தொற்றாளர்களுக்கு 5700 பேர் வரை இறக்கக் கூடும் எனவும் குறித்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்பினால் பெருமளவானோர் உயிரிழக்கும் நிலையில், ஒக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிமர் மருந்து பற்றாக்குறை போன்ற காரணிகளும் உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.