இலங்கை

அனுராதபுரத்திலும் 13 பாடசாலைகளுக்கு பூட்டு

அனுராதபுரம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 13 பாடசாலைகளுக்கு ஏப்ரல் 30 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாக வட மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

இதேவேளை கேகாலை, மேல் மாகாணம் மற்றும் வட மேல் மாகாணம், திருகோணமலையில் சில பாடசாலைகள் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் உள்ள 15 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.