விளையாட்டு

குசல் பெரேரா நிரபராதியானார்- பல டொலர் கிடைக்கும் வாய்ப்பு.

இலங்கை கிரிக்கெட் அணியின் குசல் பெரேரா தனது 2015-16ஆம் ஆண்டு ஊக்கமருந்து இடைநீக்கத்திற்கு கணிசமான இழப்பீடு பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் உடனான தீர்வு பேச்சுவார்த்தைகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், இழப்பீடுகள் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான குசல் ஜனித் பெரேரா கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் ஊக்கமருந்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார், ஆனால் அதற்கு முன்னர் ஐந்து மாதங்களுக்கும் மேலாக விளையாடுவதற்கும் பயிற்சியளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

சிறுநீர் மாதிரியின் பின்னர் அவர் வழங்கியதாகக் கூறப்படும் தடைசெய்யப்பட்ட ஸ்டீராய்;’ – 19-நோராண்ட்ரோஸ்டெனியோன் இருப்பதாகக் கூறப்பட்டது.

இதனால் அவரது இந்த இடைநீக்கம் அவரை 2016ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரில் விளையாடும் வாய்ப்பை பறித்தது.

எனினும், ஊக்கமருந்து எடுத்துக்கொள்ளவில்லை என்பதில் உறுதியாக இருந்த குசல் ஜனித் பெரேரா, இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடாக மேன்முறையீடு செய்தார்.

இதனைத் தொடர்ந்து நீண்டதொரு பரிசோதனைக்கு பிறகு குசல் ஜனித் பெரேரா, ஊக்கமருந்து எடுத்துக்கொள்ளவில்லை என்பது நிரூபனமானது.

இந்த நிலையில் பெரேராவும் கிரிக்கெட் சபையும் செலவழித்த சுமார் 100,000 அமெரிக்க டொலர்களுக்கு இழப்பீடு கோரினார்.

வருமான இழப்பு மற்றும் சேதங்களுக்கும் பெரேராவும் அவரது சட்டக் குழுவும் தீர்வு நடவடிக்கைகளைத் தொடங்கிய போதும், சட்ட நடவடிக்கைகளைத் தொடர வேண்டாம் என்று தேர்வு செய்தனர்.

இதனடிப்படையில், முதாலாவது தடவையாக சர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்த சந்திப்பு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடைநீக்கம் வெளியிட்டது ஐ.சி.சி தான் என்றாலும், இந்த நிதிப் பொறுப்பை கட்டாரை சேர்ந்த ஆய்வகமே இறுதியில் இழப்பீட்டை செலுத்தக்கூடும்.