இலங்கை காணொளி முல்லைத்தீவு

கேப்பாப்புலவில் நீடிக்கிறது பதற்ற நிலை. தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மேலும் இருவர் இன்று உயிரிழப்பு! (காணொளி)

மரணத்திற்கு காரணம் என்ன? விளக்குகிறார் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

முல்லைத்தீவு கேப்பாபுலவு தனிமைபடுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 2 பேர் உயிரிழந்த போதும் அவர்களது மரணத்திற்கான காரணம் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.

அவர்களில் இன்று காலை ஒருவரும் மாலை ஒருவரும் உயிரிழந்த நிலையில் ஒருவர் மார்பு சம்பந்தப்பட்ட நோயுடனும் மற்றுமொருவர் வலிப்பு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.எனினும் அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்திருந்திருந்த நிலையில் அவர்களது மாதிரிகள் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.