Category: கனடா செய்திகள்

  • மர்மமான MH370 மலேசியன் விமானத்தை தேடும் பணிகள் மீள ஆரம்பம்!

    239 பேருடன் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370 இன் சிதைந்த பகுதிகளைத் தேடும் பணி எதிர்வரும் டிசம்பர் 30 ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    55 நாட்களுக்கு நடைபெறும் இந்தப் புதிய தேடல் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டது.

    ஆனால் மோசமான வானிலை காரணமாக சிறிது நேரத்திலேயே நிறுத்தப்பட்டது.

    2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குப் பயணித்தபோது, ​​போயிங் 777 ரக விமானம் MH370 காணாமல் போனது.

    இது விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகப்பெரிய தேடலைத் தூண்டியது.

    “கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் கட்டணம் இல்லை” என்ற ஏற்பாட்டின் கீழ் தற்போதைய தேடலை ஆய்வு நிறுவனமான ஓஷன் இன்ஃபினிட்டி (Ocean Infinity) வழிநடத்துகிறது. 

    விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு 70 மில்லியன் டொலர் (£56 மில்லியன்) கிடைக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் முன்னதாக தெரிவித்தார்.

    முந்தைய முயற்சிகளில் 26 நாடுகளைச் சேர்ந்த 60 கப்பல்கள், 50 விமானங்களை உள்ளடக்கிய பன்னாட்டு தேடல் அடங்கும்.

    இது 2017 இல் முடிந்தது.

    மேலும் 2018 இல் ஓஷன் இன்ஃபினிட்டியின் முயற்சி மூன்று மாதங்களுக்குப் பின்னர் முடிவுக்கு வந்தது.

    தொடர்ந்து துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • வட்டுவாகல் பாலம் தற்காலிக புனரமைப்பு நிறைவு -போக்குவரத்துக்கு அனுமதி!

    வட்டுவாகல் பாலம் தற்காலிக புனரமைப்பு நிறைவு பெற்று அனைத்து வாகனங்களும் இன்று இரவிலிருந்து அனைத்து வாகனங்களும் பயணிக்க வழி செய்யப்பட்டுள்ளது.

    பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதனை சீர் செய்யும் பணி இரவு பகலாக இடம்பெற்றிருந்தது.

    அண்மைய நாட்களாக பெய்த கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து நீர் பாய்ந்திருந்தது. இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டிருந்தது.

    எனவே தேவையின் நிமித்தம் முல்லைத்தீவிற்கு பயணம் செய்வோர் புதுக்குடியிருப்பு கேப்பாபிலவு வழியான மாற்று வழியினை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ச்சியாக இரவு பகலாக வேலைகள் இடம்பெற்று வட்டுவாகல் பாலமூடான போக்குவரத்து நேற்று இரவு 9.45 மணியளவில் இருந்து வட்டுவாகல் பாலமூடான போக்குவரத்தினை மேற்கொள்ள வழி செய்யப்பட்டு, தொடர்ந்து வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.

  • சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்

    சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது.

    இன்று ஆரம்பமாகும் இந்த யாத்திரையானது, அடுத்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினம் வரை நடைபெறும். 

    2025 – 2026 ஆம் ஆண்டுக்கான யாத்திரை ஆரம்பத்தை குறிக்கும் வகையில், ஸ்ரீ சுமன சமன் சிலையினை மலை உச்சிக்குகொண்டு செல்லும் பவனி, நேற்று (03) அதிகாலை பெல்மதுளை கல்பொத்தாவல ராஜமஹா விகாரையிலிருந்து முன்னெடுக்கப்பட்டது. 

    இந்நிகழ்வு, ஸ்ரீபாதஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதிண்ண நாயக்க தேரரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது.

  • இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிவாரணம்

    இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி 3 மில்லியன் அமெரிக்க டாலர் அனர்த்த நிவாரண மானியத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. 

    அத்துடன், சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் தலா 2 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகரித்துள்ளது. 

    சம்பந்தப்பட்ட அரசாங்கங்களிடமிருந்து விடுக்கப்பட்ட உதவி கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கண்டா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

    “இந்த அழிவுகரமான அனர்த்தங்களால் ஏற்பட்ட துயரங்களைக் கண்டு நான் ஆழ்ந்த வருத்தமடைகிறேன் என்று கூறிய மசாடோ கண்டா, உயிர்களைக் காப்பாற்றவும், சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆசிய அபிவிருத்தி வங்கி உதவிகளை வழங்கும் என இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளார். 

    இந்த மோசமான நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆறுதல் மற்றும் நம்பிக்கையை வழங்க நாங்கள் குறித்த அரசாங்கங்களுடன் இணைந்து விரைவாகவும் ஒத்துழைப்புடனும் செயல்படுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

  • இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

    வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

    நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

    மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

    மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

    காற்று :

    நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  • இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

    வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

    மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

    இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    காற்று:

    காங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையில் காற்று வீசும், மற்ற கடற்பரப்புகளில் காற்று மாறுபடும். காற்றின் வேகம் மணிக்கு (25-35) கி.மீ. வரை இருக்கும்.

    கடல் நிலை:

    நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகள் லேசானது முதல் மிதமானது வரை இருக்கலாம்.

    இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும் மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

  • முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிடியாணை

    முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (டிசம்பர் 3) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமையால், அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    குறிப்பிட்ட வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவர் இன்று முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையடுத்து, அவருக்கு எதிராக கோட்டை நீதவான் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக எமது நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார்.

  • இலங்கைக்கு கைகொடுக்கும் பாகிஸ்தான்! – கடல் மார்க்கமாக அவசர நிவாரணப் பொருட்கள்!

    சமீபத்திய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். 

    “எமது இலங்கை சகோதர சகோதரிகளை ஆதரிப்பதற்காக அவசரமாகத் தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை நாம் உடனடியாக அனுப்பி வைக்கிறோம். இந்தச் சேதத்திலிருந்து இலங்கை மீண்டு வரும்போது, எங்களால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து வழங்குவோம்,” என அவர் தனது X பக்கத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

    நேற்று மாலை (02) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலை அடுத்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த நிவாரண உதவியை அறிவித்துள்ளார். 

    இதற்கிடையில், அழிவுகரமான ‘டிட்வா’ (Ditwah) புயலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நிவாரண முயற்சிகளை ஆதரிக்கும் வகையில், 200 டன் மனிதாபிமான உதவிகளைப் பாகிஸ்தான் கடல் மார்க்கமாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகப் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

  • திட்வா புயலால் 275,000 குழந்தைகள் பாதிப்பு

    “திட்வா” (Ditwa) சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இலங்கையில் 275,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    குறித்த விடயத்தை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய இலங்கைக்கான பிரதிநிதி (Emma Brigham) தெரிவித்துள்ளார்.

    யூனிசெஃப் மேற்கொண்ட ஆரம்ப மதிப்பீட்டின் போதே இந்தக் தரவுகள் வெளியாகியுள்ளன.

    இருப்பினும், பல பகுதிகளில் இன்னும் சாலை மற்றும் தகவல் தொடர்பு தடைகள் நிலவுவதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று (Emma Brigham) குறிப்பிட்டுள்ளார்.

  • ஒரு மாத சம்பளத்தை வீடு கட்ட கொடுக்கும் சாணக்கியன் எம்.பி

    வீடுகளை இழந்த மக்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்குடன், தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

    அண்மையில் நாட்டைத் தாக்கிய சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அனர்த்த நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கண்டியில் நேற்று (03.12.2025) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

    அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாட்டை மீள கட்டியெழுக்க திறைசேரி நிதி மட்டும் போதாது என ஜனாதிபதி கூறினார்.