Blog

  • தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

    2025 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணைக்கான 6 முதல் 10 ஆம் தரங்களுக்கான தவணைப் பரீட்சை நடத்தப்படாது என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட வழிமுறைகளை செயல்படுத்துமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு, குறிப்பாக அனைத்து அதிபர்களுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

    மாணவர்களை அடுத்த தரங்களுக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    எவ்வாறாயினும், 11 ஆம் தர மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சையை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Related

  • ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

    இந்த ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இன்று (16) ஆரம்பமாகியுள்ளன.

    எனினும், மூன்று மாகாணங்களில் 640 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்படாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

    அதற்கு அமைவாக ஊவா, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா குறிப்பிட்டுள்ளார்.

    மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 8 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

    எனினும், டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவு நிலைமை காரணமாக கல்வி அமைச்சு பாடசாலைகள் திறப்பதை ஒத்திவைத்தது.

    அதன்படி, இன்று தொடங்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 22 வரை தொடரும், அதைத் தொடர்ந்து டிசம்பர் 23 முதல் டிசம்பர் 28 வரை கிறிஸ்துமஸ் விடுமுறைகள் இருக்கும்.

    மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டத்திற்காக டிசம்பர் 29 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டு டிசம்பர் 31 வரை தொடரும்.

    அதன் பின்னர் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் முடிவடையும்.

    இதற்கிடையில், இந்த ஆண்டின் எஞ்சிய காலத்தில் பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை (SLTB) அறிவித்துள்ளது.

  • ரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!

    வெள்ளம், மண்சரிவு மற்றும் வீதி மூடல்கள் காரணமாக பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பான சுற்றறிக்கையை நேற்று (16) அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிறுவனத்தின் தலைவர்களுக்கு வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    அதன்படி, டித்வா சூறாவளி காரணமாக தங்கள் வசிப்பிடத்திலிருந்து பணியிடத்திற்கு பொது போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டதால் பணிக்கு வர முடியாத அல்லது வீதி மூடல்கள் அல்லது பேரழிவுகள் காரணமாக பணிக்கு வர முடியாத அதிகாரிகளுக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்பட உள்ளது.

  • மர்மமான MH370 மலேசியன் விமானத்தை தேடும் பணிகள் மீள ஆரம்பம்!

    239 பேருடன் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370 இன் சிதைந்த பகுதிகளைத் தேடும் பணி எதிர்வரும் டிசம்பர் 30 ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    55 நாட்களுக்கு நடைபெறும் இந்தப் புதிய தேடல் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டது.

    ஆனால் மோசமான வானிலை காரணமாக சிறிது நேரத்திலேயே நிறுத்தப்பட்டது.

    2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குப் பயணித்தபோது, ​​போயிங் 777 ரக விமானம் MH370 காணாமல் போனது.

    இது விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகப்பெரிய தேடலைத் தூண்டியது.

    “கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் கட்டணம் இல்லை” என்ற ஏற்பாட்டின் கீழ் தற்போதைய தேடலை ஆய்வு நிறுவனமான ஓஷன் இன்ஃபினிட்டி (Ocean Infinity) வழிநடத்துகிறது. 

    விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு 70 மில்லியன் டொலர் (£56 மில்லியன்) கிடைக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் முன்னதாக தெரிவித்தார்.

    முந்தைய முயற்சிகளில் 26 நாடுகளைச் சேர்ந்த 60 கப்பல்கள், 50 விமானங்களை உள்ளடக்கிய பன்னாட்டு தேடல் அடங்கும்.

    இது 2017 இல் முடிந்தது.

    மேலும் 2018 இல் ஓஷன் இன்ஃபினிட்டியின் முயற்சி மூன்று மாதங்களுக்குப் பின்னர் முடிவுக்கு வந்தது.

    தொடர்ந்து துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • வட்டுவாகல் பாலம் தற்காலிக புனரமைப்பு நிறைவு -போக்குவரத்துக்கு அனுமதி!

    வட்டுவாகல் பாலம் தற்காலிக புனரமைப்பு நிறைவு பெற்று அனைத்து வாகனங்களும் இன்று இரவிலிருந்து அனைத்து வாகனங்களும் பயணிக்க வழி செய்யப்பட்டுள்ளது.

    பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதனை சீர் செய்யும் பணி இரவு பகலாக இடம்பெற்றிருந்தது.

    அண்மைய நாட்களாக பெய்த கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து நீர் பாய்ந்திருந்தது. இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டிருந்தது.

    எனவே தேவையின் நிமித்தம் முல்லைத்தீவிற்கு பயணம் செய்வோர் புதுக்குடியிருப்பு கேப்பாபிலவு வழியான மாற்று வழியினை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ச்சியாக இரவு பகலாக வேலைகள் இடம்பெற்று வட்டுவாகல் பாலமூடான போக்குவரத்து நேற்று இரவு 9.45 மணியளவில் இருந்து வட்டுவாகல் பாலமூடான போக்குவரத்தினை மேற்கொள்ள வழி செய்யப்பட்டு, தொடர்ந்து வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.

  • சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்

    சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது.

    இன்று ஆரம்பமாகும் இந்த யாத்திரையானது, அடுத்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினம் வரை நடைபெறும். 

    2025 – 2026 ஆம் ஆண்டுக்கான யாத்திரை ஆரம்பத்தை குறிக்கும் வகையில், ஸ்ரீ சுமன சமன் சிலையினை மலை உச்சிக்குகொண்டு செல்லும் பவனி, நேற்று (03) அதிகாலை பெல்மதுளை கல்பொத்தாவல ராஜமஹா விகாரையிலிருந்து முன்னெடுக்கப்பட்டது. 

    இந்நிகழ்வு, ஸ்ரீபாதஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதிண்ண நாயக்க தேரரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது.

  • இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிவாரணம்

    இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி 3 மில்லியன் அமெரிக்க டாலர் அனர்த்த நிவாரண மானியத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. 

    அத்துடன், சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் தலா 2 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகரித்துள்ளது. 

    சம்பந்தப்பட்ட அரசாங்கங்களிடமிருந்து விடுக்கப்பட்ட உதவி கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கண்டா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

    “இந்த அழிவுகரமான அனர்த்தங்களால் ஏற்பட்ட துயரங்களைக் கண்டு நான் ஆழ்ந்த வருத்தமடைகிறேன் என்று கூறிய மசாடோ கண்டா, உயிர்களைக் காப்பாற்றவும், சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆசிய அபிவிருத்தி வங்கி உதவிகளை வழங்கும் என இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளார். 

    இந்த மோசமான நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆறுதல் மற்றும் நம்பிக்கையை வழங்க நாங்கள் குறித்த அரசாங்கங்களுடன் இணைந்து விரைவாகவும் ஒத்துழைப்புடனும் செயல்படுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

  • அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை – ஆதாரத்தை காட்டுமாறு சவால் விடுக்கும் அமைச்சர்

    இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

    கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி இலங்கைக்கு பாரிய அளவில் புயல் தாக்கம் ஏற்படும் என முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதனை அரசாங்கம் கவனத்திற்கு கொள்ளவில்லை எனவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் கிடையாது.

    இந்த அனர்த்தம் தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி ஏதேனும் ஓர் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு இருந்தால் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் கோரியுள்ளார்.

    கடந்த நவம்பர் மாதம் முழுவதும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட காலநிலை குறித்த அறிக்கைகள் தம்மிடம் இருப்பதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அதிகாரப்பூர்வமாக இவ்வாறான அறிக்கை வெளியிடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

    வளிமண்டலவியல் திணைக்களம் அவ்வாறான ஒரு ஒரு முன்எச்சரிக்கையை வெளியிட்டு இருந்தால் அது குறித்து அனர்த்த முகாமைத்துவ மையம் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும் என தெரிவித்துள்ளார்.

    ஆகவே நவம்பர் 12 ஆம் திகதி அறிவுறுத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது. எதிர்க்கட்சியின் ஒருசில உறுப்பினர்களின் கருத்துக்கள் வெறுக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். 

  • யாழ் பல்கலை மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட உத்தரவு

    பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

    இதனடிப்படையில், டிசம்பர் பத்தாம் திகதி வரை விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர் இந்த கைது இடம்பெற்றது.

    இந்தநிலையில், குறித்த குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கடந்த மாதம் 29 ஆம் திகதி கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று (03) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

    விளக்கமறியல் காலம் முடிவடைந்த பின்னர் இன்று மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

    விசாரணைகளை முன்னெடுத்த மேலதிக நீதிவான் உசைன் சந்தேக நபர்கள் 19 பேரையும் டிசம்பர் பத்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

  • வட மாகாணத்தின் பல வீதிகள் வழமைக்கு

    வடக்கில் பேரிடரால் பாதிக்கப்பட்ட  7 பிரதான வீதிகள் தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன

    குறித்த விடயத்தை வட மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பொறியியலாளர் அபிராமி வித்யாபரன் தெரிவித்துள்ளார்.

    அரச திணைக்களங்கள், இராணுவம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் பின்வரும் வீதிகள் மிகக் குறுகிய காலத்தில் புனரமைக்கப்பட்டுள்ளன கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் பண்ணை வீதி 40 மீற்றர் திருத்தப்படுகின்றது.

    முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை – கேப்பாப்பிலவு – புதுக்குடியிருப்பு வீதியில் 25 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது.

    வவுனியா மாவட்டத்தில் பூவரசன்குளம் – செட்டிக்குளம் வீதி 50 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது.

    மாந்தைமேற்கில் மாந்தை பரப்புக்கடந்தான் வீதி 5 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது.

    கட்டாடுவயல் – இராமயன்குளம் வீதி 500 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது. மகிழங்குளம் – பள்ளமடு வீதி 40 மீற்றர் திருத்தப்பட்டு வருகின்றது.

    போக்குவரத்துக்காக மீண்டும் திறப்பு

    மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் பேரிடரால் நேற்று (3) திடீரென சேதமடைந்த கற்சிலைமடு பேராறுப்பாலம், வட மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் உடனடியாகத் திருத்தியமைக்கப்பட்டுப் பொதுமக்களின் போக்குவரத்துக்காக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.